“தங்கம் வாங்குறீங்களா…? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க…” 24K, 22K, 18K-க்கு என்ன வித்தியாசம்…? லாபகரமான முதலீடு எது…?

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் அளவீடே ‘காரட்’ ஆகும். இதில் 24 காரட் என்பது 99.9% தூய்மையானது, ஆனால் இது மிகவும் மென்மையாக இருப்பதால் ஆபரணங்கள் செய்யப் பயன்படாது.  முதலீடு செய்ய விரும்புவோர் இதை நாணயங்களாகவோ அல்லது கட்டிகளாகவோ வாங்கலாம். பொதுவாக நகைகள் செய்வதற்கு 91.6% தங்கம் கொண்ட 22 காரட்டே சிறந்தது. வைரம் மற்றும் கற்கள் பதித்த நகைகள் செய்வதற்கு அதிக உறுதி தேவை என்பதால் 75% தங்கம் கொண்ட 18 காரட் பயன்படுத்தப்படுகிறது.

தங்கம் வாங்கும்போது அதன் விலையுடன் செய்கூலி மற்றும் சேதாரம் ஆகியவையும் கணக்கிடப்படும். 24 காரட் தங்கக் காசுகளை வாங்கும்போது இத்தகைய கூடுதல் செலவுகள் குறைவாக இருக்கும் என்பது முதலீட்டாளர்களுக்கு லாபகரமானது. காரட் அளவு குறையக் குறைய தங்கத்தின் தூய்மையும் விலையும் குறையும். எனவே, ஆபரணமாக அணிய விரும்புவோர் 22 காரட்டையும், நீண்ட கால சேமிப்பிற்காக வாங்குவோர் 24 காரட்டையும் தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவாகும்.