மக்களே… பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதாவது புகாரா?… ஒரு கிளிக் பண்ணா போதும்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பை உரிய முறையில் வழங்குவதற்கு அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் நாளை பொங்கல் பரிசு வழங்குவதற்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தற்போது வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தரம் குறைபாடு, ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.