தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 39 சட்டமன்றத் தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரி வரும் நிலையில், திமுக தரப்போ 25 தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என்பதில் கறாராக உள்ளது. இந்த ‘பஞ்சாயத்து’ இன்னும் முடிவுக்கு வராததால், கூட்டணிக் கணக்குகள் இறுதி செய்யப்படாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றன.
மறுபுறம், தேமுதிகவின் நிலைப்பாடு தற்போது மிகவும் சுவாரஸ்யமாக மாறியுள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சரிவைச் சந்தித்த தேமுதிக, மீண்டும் தனது செல்வாக்கை நிலைநாட்டப் போராடி வருகிறது. அதிமுகவிடம் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காத நிலையில், தற்போது திமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுவதால், தேமுதிகவைத் தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் ஆர்வம் காட்டி வருகிறது. தேமுதிகவுக்கு சுமார் 7 முதல் 8 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க திமுக சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.
இருப்பினும், தேமுதிகவின் இறுதித் தொகுதிகள் எண்ணிக்கை காங்கிரஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும். காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றால் தேமுதிகவுக்குக் கிடைக்கும் இடங்கள் குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம், காங்கிரஸ் ஒருவேளை கூட்டணியில் இருந்து வெளியேறினால், தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கக்கூடும். இந்தச் சூழலில், காங்கிரஸ்-திமுக இடையிலான பேச்சுவார்த்தை எப்போது முடியும் என்று தெரியாமல், தேமுதிக ‘இலவு காத்த கிளி’ போலக் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளக் கால…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக, அடுத்தடுத்து குதிரை பேரம்…
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…