ஹரியானா மாநிலம் குருகிராமில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியாளர்களாகப் பணிபுரிந்து வந்த இரு இளம் ஊழியர்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஸ்ரேஷ்ட் மாலிக் (25) மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஷாரா அயூபி ஆகிய இருவரும் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், இஷாராவை அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் போலீஸில் புகார் அளித்தனர். மொபைல் போன் இருப்பிடத்தை வைத்து போலீஸார் சோதித்தபோது, செக்டார் 55 இல் உள்ள மாலிக்கின் தங்கும் விடுதி (PG) அறையில் இஷாரா பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறையில் இருந்த ரத்தக் கறைகள் இருவருக்கும் இடையே கடுமையான போராட்டம் நடந்ததை உணர்த்துகின்றன.
இக்கொலைச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, டெல்லி கார்ஹி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபரின் சடலத்தை அரசு ரயில்வே போலீஸார் மீட்டனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட மொபைல் போனை வைத்து நடத்திய விசாரணையில், அது ஸ்ரேஷ்ட் மாலிக் என்பதும், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் இஷாரா, மாலிக்கின் அறைக்குக் குடிபெயர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், அக்கம் பக்கத்தினருக்கு எந்தவித அலறல் சத்தமும் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். காதலியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு இளைஞரும் தற்கொலை செய்துகொண்ட இந்த விபரீத முடிவுக்கான காரணம் என்ன, அவர்களுக்குள் என்ன தகராறு நடந்தது என்பது குறித்து போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய…
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக…
திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும்…
ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மூலம் பாரம்பரியமிக்க சம்பல்புரி புடவைகளை விற்பனை செய்வதாகக் கூறி, நூதன முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட…
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் டயப்பர் மட்டும் அணிந்தபடி…
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…