பஸ்தி பகுதியில் பிற்பகல் 1 மணி அளவில், 50 வயதான கிருஷ்ணா என்பவர் தனது வயலுக்குச் சென்றார். அங்கு தனது 17 வயது மகள், அவரது 21 வயது காதலனுடன் தகாத நிலையில் இருப்பதைக்கண்டு பேரதிர்ச்சியடைந்தார். தன் கண்முன்னே நடந்த இந்தச் சம்பவத்தைத் தாங்க முடியாத கிருஷ்ணா, மகளையும் அந்த வாலிபரையும் கடுமையாகக் கண்டித்து எச்சரித்தார்.
ஆனால், இந்த விவகாரம் வெறும் கண்டிப்புடன் முடியாமல், கிருஷ்ணாவுக்கும் அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதம் விரைவில் வன்முறை மோதலாக உருவெடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த மகளும் அவளது காதலனும், அவமானத்திற்குப் பயந்து அந்த இடத்திலேயே ஒரு கொடூரமான முடிவை எடுத்தனர்.
அருகில் கிடந்த கூர்மையான அரிவாளை எடுத்த இருவரும் கிருஷ்ணாவைத் கொடூரமாகத் தாக்கினர். சிறிதும் இரக்கமின்றி அவரது கழுத்து, நெஞ்சுக் கூடு மற்றும் முகத்தில் மீண்டும் மீண்டும் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இக்கொடூர குற்றத்தைச் செய்த பிறகு, ஆதாரங்களை அழிப்பதற்காக கிருஷ்ணாவின் உடலை அருகில் உள்ள கால்வாய் கரையில் இருந்த அடர்ந்த புதரில் மறைத்து வைத்தனர்.
