இனிமேல் தான் ஆட்டம் இருக்கு… ஆளுநர் மாளிகைக்கு பறந்த கடிதம்… அம்பலமான வைகோவின் ஆடியோ வாக்குமூலம்… தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்…!

By Visaka on ஆடி 13, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், தற்போதைய அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக-விற்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்தன. இந்த வரிசையில் இறுதியாக, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவும் தவெக அணியில் இணைந்தது. தனது எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெக ஆதரவுடன் தனிச் சின்னத்தில் போட்டியிட வைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டமிட்டார். இதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யிடம் வைகோ பேசியதும், அதற்கு விஜய் ஒப்புக்கொண்டு பிரச்சாரம் செய்யத் தயார் எனக் கூறியதும் அண்மையில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

வைகோவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் “குதிரை பேரம்” போன்ற சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்துவதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருந்தன. இந்த நிலையில், இன்று மீண்டும் திமுக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து கூடுதல் ஆதாரங்களுடன் பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், கடந்த ஜூலை 1ஆம் தேதி அளித்த புகாரின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் மற்றும் வைகோ ஆகியோர் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றவியல் சதித்திட்டம் குறித்து உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முறையான குற்றவியல் விசாரணையைத் தொடங்க உத்தரவிடுமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

   

மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட போது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெக-வில் இணையுமாறு காவல் துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல, திமுக எம்.எல்.ஏ எஸ். ஆஸ்டினுக்கு பதவி மற்றும் பல்வேறு சலுகைகளை ஆசை காட்டி கட்சி மாறச் செய்ய குதிரை பேரம் நடந்ததாகவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வைகோ மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் பொதுவெளி ஒப்புதல் வாக்குமூலங்களை ஒருங்கிணைத்து ஆராய்ந்தால், இதில் கூட்டுச் சதி மற்றும் சட்டவிரோத செயல்கள் நடந்திருப்பது தெளிவாகத் தெரிவதால், உடனடியாக காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என திமுக தனது புகாரில் திட்டவட்டமாகக் கோரியுள்ளது.