உக்ரைனின் ஹர்கிவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான ‘ஷாஹெட்’ ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரு வயது குழந்தையான ஏஞ்சலினா தனது தாயார் இன்னாவுடன் உயிரிழந்ததுடன், 11 வயது சிறுமி உட்பட மேலும் பலர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவளித்து, ஏவுகணைகள் மற்றும் தாக்குதல்களைத் தடுத்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களைப் பாதுகாக்க வான் பாதுகாப்பு உக்ரைனுக்கு மிக அவசியமாகும், மேலும் ரசியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்வதை நிறுத்தி, படுகொலைகள் நிற்கும் வரை அதன் மீதான பொருளாதாரத் தடைகள் நீடிக்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உறுதுணையுடன் உக்ரைன் அமைதியை விரும்புகிறது, ஆனால் ரசியாவே தொடர்ச்சியாக வதைகளையும் கொலைகளையும் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் தங்களின் முழுமையான பலத்தைப் பயன்படுத்தி இந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
