அலைகளுடன் போராடிய குழந்தை,… அசால்ட்டாக போஸ் கொடுத்த பெற்றோர்… சட்டென வந்து காப்பாற்றிய அந்நிய மனிதர்… வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மோகம் எந்த அளவிற்கு முற்றிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில், கடற்கரையில் பெற்றோர் ரீல்ஸ் எடுப்பதில் மூழ்கியிருக்க, அருகில் கடல் அலைகளில் சிக்கித் தவித்த தங்களது பெண் குழந்தையைக் கவனிக்கத் தவறிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது.

கடற்கரை மணற்பரப்பில் தாய், தந்தை இருவரும் செல்ஃபி ஸ்டிக் உதவியுடன் வீடியோ பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தபோது, அவர்களுடன் இருந்த சிறுமி திடீரென அலைகளின் வேகத்தால் கீழே தள்ளப்பட்டுப் போராடினாள்.

   

பெற்றோர் அதைக் கண்டும்கொள்ளாமல் தொடர்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, அங்கிருந்த அந்நிய நபர் ஒருவர் உடனடியாகப் பாய்ந்து சென்று குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பெற்றோரின் கடுமையான பொறுப்பற்றத் தன்மையைக் கண்டித்துத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.