திருமணமான 9-வது நாளே நேர்ந்த கொடூரம்… தேனிலவில் புதுப்பெண்ணுக்கு கணவன் செய்த காரியம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நொய்டா செக்டார்-122 பகுதியைச் சேர்ந்த 27 வயதான சுசரிதா சாஹா என்பவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹர்விந்தர் சௌஹான் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, ஹர்விந்தர் நொய்டாவில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே தங்கி வந்த நிலையில், தேவையில்லாத காரணங்களுக்காகத் தனது மனைவி சுசரிதாவை தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த புதுமணத் தம்பதியர் கடந்த மே 4-ஆம் தேதி தேனிலவுக்காக சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அங்கு மே 9-ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கணவர் ஹர்விந்தர், சுசரிதாவை ஹோட்டல் மாடிப் படிக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் சுசரிதாவின் தலை, முதுகு மற்றும் முழங்கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் எனவும் அவர் மனைவியை மிரட்டியுள்ளார்.

தேனிலவு முடிந்து நொய்டா திரும்பியதும், தன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்போவதாக சுசரிதா கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த கணவர், சுசரிதாவின் செல்போனைப் பறித்துத் தரையில் வீசி உடைத்ததோடு, அவரது முகத்தில் குத்தி, வயிற்றில் உதைத்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், மனைவியைக் காயங்களுடன் தவிக்கவிட்டு, அங்கிருந்து தப்பித்து டெல்லியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, காயமடைந்த சுசரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர், இந்த கொடூரம் குறித்து நொய்டா செக்டார்-113 காவல் நிலையத்தில் அவர் தைரியமாகப் புகார் அளித்தார். சுசரிதாவின் புகாரின் அடிப்படையில், கணவர் ஹர்விந்தர் சௌஹான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அந்த கல்நெஞ்சக்கார கணவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

52 seconds ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

16 minutes ago

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

26 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

31 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

33 minutes ago