சீச்சீ… என்ன கொடுமை இது… பசுவிடம் வக்கிரமாக நடந்து கொண்ட கொடூரம்… கையும் களவுமாக பிடிபட்ட… பிறகு தப்பியோடிய நபர்… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 13, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாடு மேய்க்கும் தொழிலாளியான மேர்கிபாய் சாவ்டா என்பவருக்குச் சொந்தமான இரண்டு வயது பசு மாடு ஒன்று வீட்டை விட்டுத் தவறி வெளியேறியது. காணாமல் போன தனது பசுவைத் தேடிச் சென்ற சாவ்டா, அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு அருகே சென்றபோது, அங்கு கனுபாய் கோண்டாலியா என்ற நபர் அந்தப் பசுவிடம் வக்கிரமான முறையில் நடந்து கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது செயலை மாட்டின் உரிமையாளர் கவனித்து விட்டதைக் கண்ட கனுபாய், உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனினும், இந்த கொடூர சம்பவத்தை அப்பகுதியில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

   

இதனைத் தொடர்ந்து, மாட்டின் உரிமையாளர் மேர்கிபாய் சாவ்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11(1)(a)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த கனுபாயைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.