“சீச்சீ இப்படியும் கூடவா இருப்பாங்க…” தந்தையே மகளுக்கு செய்த கொடூர செயல்….. கண்ணீர் விட்டு கதறிய சிறுமி….!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட அவரது தாயார், கதறி அழுதார்.

பின்னர் அந்த சிறுமியிடம் அவரது தாயாரும் டாக்டர்களும் விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்தச் சிறுமி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். கடந்த ஒரு வருடமாக அவரது தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவத்தை விரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவருடைய தந்தையை கைது செய்தனர். இந்தக் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.