டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்த பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பிராணிகள் விரும்பியதால் ஆட்சேபனை தெரிவித்ததால் தெரு நாய்களை பிடித்து கருத்தடை தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் நாய்களுக்கு ஆதரவாக பேசிய படவா கோபியின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு மன்னிப்பு கேட்டு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நீயா நானாவில் என்னை பேசவே விடல. பொதுமக்கள் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல எனது கருத்துக்கள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
