ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள் அனைவரும் குழந்தையைக் காப்பாற்ற முன்வராமல், தங்கள் அலைபேசிகளில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். மனித நேயம் மரணித்துப் போன அந்தத் தருணத்தில், எவரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த ஒரு பசு மாடு தெய்வமாக வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நிஜமாவே இத பாக்கும்போது உடம்பெல்லாம் சிலிர்க்குது! 😱💔
இரயில் தண்டவாளத்துல ஒரு குழந்தை.. எதிரே மின்னல் வேகத்துல வர்ற ட்ரெயின்! சுத்தி இருந்தவங்க வீடியோ எடுத்துட்டு இருந்தாங்களே தவிர யாரும் காப்பாத்த வரல.
ஆனா, யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அந்தப் பசு மாடு செஞ்ச காரியம்..… pic.twitter.com/RVtiXlApyB
— மரங்கொத்தி Woody (@marankothi) April 15, 2026
வாயில்லா ஜீவன்களுக்கு இருக்கும் அந்த உயிர் நேயமும், கருணையும் கூட மனிதர்களிடம் இல்லாமல் போனது மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையைக் கண்டதும் ஒரு நொடியும் தாமதிக்காமல் பாய்ந்து சென்று காப்பாற்றிய அந்தப் பசுவின் செயல், மனிதர்களைத் தலைகுனிய வைத்துள்ளது. மனித நேயம் என்பது பேச்சில் அல்ல, செயலில்தான் இருக்கிறது என்பதை இந்தப் பேசாத உயிர் நிரூபித்துக் காட்டியுள்ளது.
