இளம் வயதினர் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா?…. எய்ம்ஸ் ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தரும் தகவல்…!

By Nanthini on மார்கழி 15, 2025

Spread the love

நாட்டில் கடந்த சில நாட்களாகவே இளம் வயதினர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சில காரணங்களால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு மூலமாக கடந்த ஓராண்டில் தெரிய வந்திருக்கும் தகவல் குறித்து எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் அரவா கூறியுள்ளார், கொரோனா தடுப்பூசிக்கும் இளம் வயதினர் திடீர் மரணத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இளம் வயதினர் திடீர் மரணங்கள் மாரடைப்பால் ஏற்படுகின்றது. ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படும் போது இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே திடீர் மரணம் ஏற்படுகிறது. இத்தகைய மரணங்கள் இந்தியாவில் இது வரைப்படவில்லை. எங்கள் ஆய்வின் முதல் கட்ட அறிக்கையில் இவற்றை ஆவணப்படுத்தி உள்ளோம். இதுபோன்ற இளம் வயதினர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று பார்த்தால், எங்கள் ஆய்வை தொடங்குவதற்கு முன்பு இதற்கான சாத்தியங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். ஆனால் ஆய்வு முடிவில் கிடைத்திருக்கும் தகவல் என்பது கொரோனா தடுப்பூசிக்கும் இளம் வயதினரின் திடீர் மாரடைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

   

உலக அளவில் பெரும்பாலான முதியவர்கள் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். அது பற்றி பல்வேறு ஆய்வு அறிக்கைகள் உள்ளது. ஆனால் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்பான ஆய்வு அறிக்கைகள் நம்மிடம் இல்லாமல் இருந்தது. இது குறித்து எங்கள் அறிக்கையில் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளோம். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம். இதுகுறித்து தனித்தனியாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பூசிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.