திருமாவை முதலமைச்சராக்க முயன்றதாக எழுந்த சர்ச்சை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாகப் பதிலளித்துள்ளார். தனது பேட்டியில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஆதரவோடு தமிழகத்தின் முதலமைச்சராகிவிடலாம் எனக் கணக்கு போட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், “திருமாவளவனை முதலமைச்சராக்கிவிட்டு, அதிமுகவினரை அமைச்சர்களாக்கலாம் என்றுதான் நான் யோசனை சொன்னேன்; ஆனால் அந்த முன்மொழிவை எடப்பாடி பழனிசாமி உடனடியாக மறுத்துவிட்டார்” என்றும் விளக்கமளித்தார். திமுகவுடன் அதிமுகதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்றும் கூறி அந்தப் பிரச்சாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
