வெனிசுலா நாட்டில் கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் அதிரடியாக நுழைந்து அதிபர் மதுரோவை சிறைபிடித்த போது, அங்கிருந்த அமைச்சர்களுக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே காலக்கெடு விதிக்கப்பட்டதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணியாவிட்டால் அனைவரும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் எனத் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாகவும், அந்த மரண பயத்தின் காரணமாகவே வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மதுரோவும் அவரது மனைவியும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கப் படைகள் தவறான தகவலைக் கூறித் தங்களை மூளைச்சலவை செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும், ரோட்ரிகஸின் இந்த வாதம் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகச் சொல்லப்படும் கட்டுக்கதையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏனெனில், மதுரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிபராகப் பொறுப்பேற்ற ரோட்ரிகஸ், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.
டொனால்ட் டிரம்ப் இவரது செயல்பாடுகளைப் பாராட்டியுள்ள நிலையில், உள்நாட்டு எதிர்ப்புகளைச் சமாளிக்கவே மிரட்டல் நாடகத்தை ரோட்ரிகஸ் அரங்கேற்றுவதாகக் கூறப்படுகிறது. எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற அமெரிக்கா நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான்…
இந்தியாவின் முன்னணி மின்பகிர்மான நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (POWERGRID), தற்போது 660 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…
மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…