பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் 11 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் வாரம் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள்.

கடந்த வாரம் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் Freeze Task சுற்று இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளது.

இன்றிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்களும், சொந்தங்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவுள்ளனர். முதலில் பூர்ணிமா, விக்ரம், விஜய், அர்ச்சனாவின் பெற்றோர்கள் வீட்டிற்குள் வருகிறார்கள். தங்களுடைய தாய், தந்தையை பார்த்தவுடன் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.

70 நாட்களுக்கும் மேலாக தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த போட்டியாளர்கள் தங்களது குடும்பத்தை பார்த்தவுடன் கதறி அழும் இந்த வீடியோ நம் கண்களையும் கலங்கடித்து விட்டது என்றே கூறலாம். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
