சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை.
#image_title
சென்னையின் நிலைமையே இப்படி இருக்கும் பொழுது தற்பொழுது நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, மாநகராட்சி காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்கும் பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் எனபது நாம் அறிந்ததே. தற்பொழுது இவர் நெல்லை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து மீட்க வேண்டும் என கூறி உருக்கமான பதிவு ஒன்றை கையெடுத்து கும்பிட்டு முதல்வருக்கு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

‘வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.’ என்று இருகரம் கூப்பி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதோ அந்த பதிவு..
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023
