“ஆட்சியில் காங்கிரஸிற்கு பங்கில்லை” ராகுல் காந்தியிடம் கனிமொழி திட்டவட்டம்..? திமுக கூட்டணியில் பரபரப்பு..!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியபோது, தமிழ்நாட்டு ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸிற்குப் பங்கு அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறையில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கலாச்சாரம் இதுவரை இல்லை என்றும், அந்தப் புதிய நடைமுறையை தற்போது கொண்டு வர இயலாது என்றும் அவர் ராகுலிடம் விளக்கமளித்ததாகச் சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், இம்முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என விருப்பம் காட்டி வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸிற்குப் பங்கு வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுவெளியில் வலியுறுத்தி வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் இந்தத் தெளிவான நிலைப்பாடு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.