போடு செம..! ஒரே நாளில் 2000 பேரை தட்டிதூக்கிய அதிமுக…. கெத்து காட்டும் EPS…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் பேசிய அவர், “கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை” என்று கடுமையாகச் சாடினார். மேலும், பொய் வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிரடி வாக்குறுதிகளை வழங்கிய EPS, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு தலா ₹25,000 மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்தார் . மேலும், ஊரகப் பகுதிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார் . இக்கூட்டம் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத் தொடக்கமாகக் கருதப்படுகிறது.