விசுவாசம் முக்கியமா? வெற்றி முக்கியமா?… தவெக வில் திடீர் விரிசல்.. கட்சிக்குள் நடக்கும் பனிப்போர் அம்பலம்..!

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் தேர்வுப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளிடையே வெடித்துள்ள கருத்து வேறுபாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கட்சித் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது வேட்பாளர் தேர்வு முறைதான். விஜய் மக்கள் இயக்கக் காலத்திலிருந்தே கட்சிக்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கே தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் வாதிட்டுள்ளார். ஆனால், ஜான் ஆரோக்கியசாமி இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டுள்ளார். வெறும் விசுவாசத்தை மட்டும் பார்க்காமல், தொகுதியில் செல்வாக்குள்ள மற்றும் வெற்றி பெறக்கூடிய தகுதியுள்ள நபர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருவருக்கும் இடையிலான இந்த காரசாரமான விவாதம் முற்றிய நிலையில், புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி அடைந்து கூட்டத்தை விட்டு வெளியேறியதாகவும், தனது அடுத்தகட்ட கட்சித் திட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. “வெற்றி முக்கியமா? அல்லது விசுவாசம் முக்கியமா?” என்ற கேள்வியே தவெக-வுக்குள் இப்போது பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆகும் நிலையில், இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப் போட்டி விஜய்க்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த உட்கட்சி பூசலை விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜய் நேரடியாகத் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருபுறம் திமுக, அதிமுக போன்ற பலமான கூட்டணிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் தவெக-வின் தேர்தல் வியூகத்தைப் பாதிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Muthu Mani

Recent Posts

“அடேய் என்னடா பண்ணுறீங்க”?…. பிரபல மல்டிபிளெக்ஸில் கொடூரம்…. காலி கப்களை கழுவி ஜூஸ் கொடுத்த பகீர் வீடியோ….!

பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…

3 minutes ago

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

15 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

25 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

31 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

37 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

44 minutes ago