உலகின் மிகவும் பிரபலமான வீடியோ கேம் தொடர்களில் ஒன்றான ‘கால் ஆஃப் டியூட்டி’ (Call of Duty) மற்றும் ‘அபெக்ஸ் லெஜண்ட்ஸ்’ (Apex Legends) ஆகியவற்றின் இணை உருவாக்குநரும், ‘ரெஸ்பான் என்டர்டெயின்மென்ட்’ (Respawn Entertainment) நிறுவனத்தின் தலைவருமான வின்ஸ் ஜாம்பெல்லா (Vince Zampella) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேமிங் உலகில் (Gaming Industry) ஒரு முன்னோடியாகத் திகழ்ந்த இவரது திடீர் மறைவு, உலகம் முழுவதிலும் உள்ள கேமிங் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடர்ன் வார்ஃபேர் (Modern Warfare) போன்ற கேம்கள் மூலம் நவீன தற்காலப் போர் விளையாட்டுப் பிரிவில் (FPS) புரட்சியை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு விளையாட்டுத் துறை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் நிறுவனங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
