இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் என்று தொடர்ந்து ஏழு ஆண்டுகளாகப் புகழப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில், அசுத்தமான குடிநீரால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பாகீரத்புரா (Bhagirathpura) பகுதியில் குடிநீர் விநியோகக் குழாய்களில் கழிவுநீர் கலந்ததால், பொதுமக்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2,500-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 140-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 15-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாக 7 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பலியானவர்களில் 5 மாதக் குழந்தை மற்றும் முதியவர்கள் அடங்குவர். அந்தவகையில் பத்து வருட நீண்ட காத்திருப்பு, பல கட்ட மருத்துவச் சோதனைகள் மற்றும் வழிபாடுகளுக்குப் பிறகு ஒரு தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆரோக்கியமாகப் பிறந்த அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் சுரக்காத காரணத்தால், மருத்துவர்களின் அறிவுரைப்படி காய்ச்சிய குழாய் நீரில் பாக்கெட் பால் கலந்து கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சமையலறையில் பயன்படுத்தி வந்த அந்த அசுத்தமான தண்ணீரே எமன் என்பதை அவர்கள் அறியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அந்த அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன. தீவிர மருத்துவ முயற்சிக்குப் பிறகும், குழந்தை உயிர் பிழைக்கவில்லை. இதனால், அந்தக் குடும்பம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…