கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

By SATHISH R on ஆடி 2, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். கடந்த 2025 செப்டம்பரில் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சோக சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக உறுதியளித்திருந்த விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கரூருக்குச் சென்று தனது வாக்குறுதியை நிறைவேற்ற உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் அவர் ஏன் இன்னும் கரூருக்குச் செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வந்தன. இந்தச் சூழலில், விஜய்யின் இந்தத் திடீர் கரூர் பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் பயணத்தின் போது, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதல்வர், நெரிசலில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளார்.

   

இதற்கிடையில், கரூர் மாவட்ட அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய திருப்பமாக, கரூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் (ஜூலை 2) முறைப்படி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த இணைப்பு விழா அமைச்சர்கள் பலரது முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த முடிவு கரூர் மாவட்ட அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்போது தவெக-வில் இணைந்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர் தான், முதல்வர் விஜய்யின் கரூர் பயணத்தையும், அங்கு நடைபெறவிருக்கும் ஆறுதல் நிகழ்வுகளையும் முன்னின்று முழுமையாக ஒருங்கிணைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காக்கும் விதமாகவும் அமையவுள்ள முதலமைச்சரின் இந்த முதல் கரூர் பயணம், தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.