“மிஸ் பண்ணிடாதீங்க…” இவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை… உடனே இதை பண்ணுங்க… ஓய்வூதியத் திட்டம் இருக்க… அப்ப மாத ரூ 3000 உறுதி… அதிரடி காட்டும் தமிழக அரசு…!

By Visaka on ஆடி 31, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் பிரம மந்திரி ஷிரம் யோகி மாந்தன் ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியான அமைப்புசாரா தொழிலாளர்கள் மாதம் தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் பெறலாம். தற்போது சென்னை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையத் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியுள்ள நபர்கள் தங்களது சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், maandhan.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   

சென்னை மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள் மற்றும் பயண முகவர்கள் அனைவரும் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழிலாளர்கள் அதிகளவில் பதிவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு சென்னை மாவட்ட சுற்றுலா அலுவலரை (கைப்பேசி எண்: 9176995863) தொடர்பு கொள்ளலாம். அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.