ஐயோ… என்னடா இது… இனி கூகுள் பே செய்தால்… எக்ஸ்ட்ரா பணமா?… மத்திய அரசின் புதிய MDR விதி… வாடிக்கையாளர்கள் தப்பிப்பது எப்படி?…

By Swetha on புரட்டாதி 22, 2026

Spread the love

மத்திய அரசால் அக்டோபர் 15 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய யுபிஐ வணிகக் கழிவு விகிதம் வியாபாரிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் யுபிஐ மூலம் பரிவர்த்தனை பெறும் வணிகர்களுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.4% கட்டணமாகப் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகள், சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையேயான பரிமாற்றங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், வங்கி மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கான இக்கட்டணம் தங்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையளிப்பதாக வணிகர்கள் கருதுகின்றனர்.

இக்கட்டணத்தை நுகர்வோரிடம் வசூலிக்கக் கூடாது என்றும் வணிகர்களே ஏற்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், கள எதார்த்தம் வேறாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் போன்ற பகுதிகளில் வணிகர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளைப் புறக்கணித்தும், ‘பானிபூரி: ரொக்கம் – ரூ.50; யுபிஐ – ரூ.51’ என்பது போன்ற நோட்டீஸ்களை ஒட்டி வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். அரசு தரப்பில் வங்கிகள் இதைக் கண்காணிக்கும் என விளக்கமளிக்கப்பட்டாலும், வணிகர்கள் இக்கட்டணத்தைச் சொந்தச் செலவில் ஏற்க முன்வராததால் மறைமுகமாக நுகர்வோர் மீதே இச்சுமை சுமத்தப்படுகிறது.

   

வணிகர்களின் இந்த முடிவால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறைந்து, மீண்டும் ரொக்கப் பணப் புழக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. முறைசாரா பணப்பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் சேவை நிறுவனங்களுக்குக் கட்டணம் ஈட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ரொக்கப் பயன்பாடு அதிகரிப்பது ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கே சவாலாக அமையும். அரசுத் தரப்பில் முறையான கட்டுப்பாடுகளும் தெளிவான நடவடிக்கைகளும் உடனடியாக தீவிரப்படுத்தப்படாவிட்டால், புதிய நடைமுறைகளின் இறுதிச் சுமை சாமானிய நுகர்வோரின் தலையிலேயே விடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.