மஹாராஷ்டிரா மாநிலம் அலிபாக் கடற்கரை பார்க்கிங் பகுதியில், தம்பதியர், 2 வயதுக் குழந்தை மற்றும் முதியவர் பயணித்த கிரெட்டா கார் மீது, கருப்பு நிறக் கண்ணாடி பொருத்தப்பட்ட ‘வெர்னா’ கார் ஒன்று அதிவேகத்தில் குறுக்கே பாய்ந்து மோதும் வகையில் வந்துள்ளது. எதிர்புறம் கார் வருவதைப் பார்த்தும் வேகத்தைக் குறைக்காமல், தவறு செய்த அந்த ஓட்டுநர் எதிரே வந்த காரை மிரட்டும் வகையில் ஹெட்லைட்டை போட்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
பார்க்கிங் பகுதிக்குள் காரின் வேகத்தைக் கண்டு அஞ்சிய 2 வயதுக் குழந்தை “நாம் தண்ணீருக்குள் செல்கிறோமா?” என கேட்ட டேஷ்கேம் வீடியோ இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகம் நடமாடும் பார்க்கிங் பகுதிகளில் இதுபோன்ற அஜாக்கிரதையான ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
