ஐயோ கொடுமையே… காதலித்த இளம் பெண்ணை… கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்… கேரளாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 17, 2026

Spread the love

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமரி அருகே உள்ள வட்டப்பாரா பி டிவிஷன் பகுதியில், 18 வயது இளம்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதான நிஷாந்த் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பரமசிவம் கோயில் தெருவைச் சேர்ந்த நித்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

பிரிந்துவிட்ட போதிலும் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொடூரச் சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். காதலித்த பெண்ணைக் கொன்றுவிட்டு உடலை எரித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.