அட கொடுமையே… ஆர்டர் வர கொஞ்சம் லேட்டானா அடிச்சிடுவீங்களா?… டெலிவரி ஊழியரை வீட்டிற்குள்… இழுத்துச் சென்று தாக்கியக் கொடூரம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

By Swetha on ஆவணி 15, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள கங்கா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில், உணவு விநியோகம் செய்வதில் ஏற்பட்ட சிறு தாமதத்தால் டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். ஆர்டர் கொண்டு வர தாமதமானதால் கோபமடைந்த குடியிருப்பாளர் ஒருவர், அந்த டெலிவரி ஊழியருடன் சில நொடிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு, சற்றும் யோசிக்காமல் அவரை உடனடியாகத் தாக்கத் தொடங்கினார்.

ஆரம்பக்கட்ட மோதலுக்குப் பிறகு, அந்த டெலிவரி ஊழியரை அந்த நபர் வலுக்கட்டாயமாகத் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் வைத்து அந்த ஊழியர் மீது மீண்டும் மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

https://twitter.com/Benarasiyaa/status/2088322123744084115/video/1

   

இந்தத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் மற்றும் விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. எளிய பின்னணியில் இருந்து உழைக்கும் ஊழியர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.