காதல் விவகாரத்தில் கொடூரம்.. இளைஞரை மிரட்டி வரவழைத்து அறையில் பூட்டி வைத்து.. பெண்ணின் குடும்பத்தார் செய்த வெறிச்செயல்… பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள தேவல் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது தலித் இளைஞரான கேதன் லால், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். இதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்தப் பெண்ணை மிரட்டி கேதனை போன் மூலம் தங்கள் கிராமத்திற்கு வரவழைத்துள்ளனர்.

அங்குச் சென்ற கேதன் மற்றும் அவரது நண்பர் திவாகர் திம்ரி ஆகிய இருவரையும் ஒரு அறைக்குள் பூட்டி, அப்பெண்ணின் குடும்பத்தினர் தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மறுநாள் அதிகாலை கேதனின் தந்தைக்குத் தகவல் கொடுக்கப்பட்டனர். அவர் விரைந்து வந்து மகனை ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், கேதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொடூரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்களும் உறவினர்களும் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸார் கொலைக் குற்றம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இக்கொலையில் தொடர்புடைய யஷ்வீர் சிங் பன்வார் என்ற நபரை போலீஸார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Swetha

Recent Posts

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

22 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

50 minutes ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

1 மணத்தியாலம் ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

1 மணத்தியாலம் ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

1 மணத்தியாலம் ago