மதங்கடந்த காதல்..! காதலனோடு சேர்த்து தங்கையையும் வெட்டிக்கொன்று புதைத்த அண்ணன்கள்… நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள உம்ரி சப்ஜிபூர் கிராமத்தில், வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த முகமது அர்மான் (27) மற்றும் காஜல் சைனி ஆகிய இருவர் காதலித்து வந்துள்ளனர். சவூதி அரேபியாவிலிருந்து திரும்பிய அர்மான், காஜலைத் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18, 2026) இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியதைக் கண்ட காஜலின் சகோதரர்கள், ஆத்திரத்தில் இருவரையும் பிடித்துக் கட்டி வைத்துத் தாக்கியதுடன், கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருவரது உடல்களையும் ஊருக்கு வெளியே குழிதோண்டிப் புதைத்து மறைத்துள்ளனர்.

தனது மகனைக் காணவில்லை என அர்மானின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஜனவரி 22, 2026 அன்று காஜலின் சகோதரர்களைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் செய்த கொடூரக் கொலையை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், மதக்கலவரம் வெடிக்காமல் இருக்கத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளான சகோதரர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

15 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

29 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

30 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago