உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சஞ்சய் காலனியில் வசிக்கும் ஒரு பெண், தனது மைத்துனர் திருமணத்திற்கு மறுத்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவரது கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். கணவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மைத்துனர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பின்னர் அவர் அந்த உறவை ஏற்க மறுத்ததால் இப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
देवर ने किया शादी से इनकार तो भाभी ने लगाई फांसी
पुलिस ने दरवाजा तोड़कर महिला को बचाया, पति की मौत के बाद देवर के संपर्क में आई भाभी, विधवा भाभी ने देवर पर लगाया ‘शादी का झांसा देकर शारीरिक संबंध बनाने’ का आरोप, कोतवाली सासनी की संजय कॉलोनी की घटना#SuicideAttempt @hathraspolice pic.twitter.com/4neOOL0ONf
— PoliceMediaNews (@policemedianews) January 13, 2026
அறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றபோது, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சஸ்னி போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது நலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் புகார் ஏதும் இதுவரை வரவில்லை என்றும், புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி அவதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
