ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின் இரண்டாம் நாள் காலை கொண்டாட்டம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக திருமணங்கள் முடிந்த மறுநாள் காலை விருந்தினர்கள் சோர்வாக இருக்கும் நிலையில், மணம
மேலும் கள் தரப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் அவர்களை வினோதமான முறையில் எழுப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. உறங்கிக் கொண்டிருக்கும் விருந்தினர்களின் அறைக்குள் செல்லும் பெண்கள், அவர்கள் வாயில் நேரடியாக மதுபானத்தை ஊற்றி எழுப்புகின்றனர். இந்த வினோதமான “விருந்தோம்பல்” முறை அந்நாட்டின் சில பகுதிகளில் ஒரு பாரம்பரிய சடங்காகப் பார்க்கப்பட்டாலும், இதைப் பார்த்த பலரும் வியப்படைந்துள்ளனர்.
What has become of Indian weddings?!
How is this approved & enjoyed?This comes from the dehati mindset when you hear “Russian” and laugh on “6000” jokes.
And don’t even make me go on this abnormal alcoholism. It is now on addiction level.
This is how you wanna marry? pic.twitter.com/i07QF4N6wx
— Siddharth’s Echelon (@SiddharthKG7) April 9, 2026
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதிலிருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு தரப்பினர் இது ஒரு வேடிக்கையான கலாச்சாரம் என்று கூறினாலும், மற்றொரு தரப்பினர் இது மிகவும் அநாகரீகமானது என்றும், ஒருவரின் விருப்பமில்லாமல் இவ்வாறு மது ஊற்றுவது தவறான முன்னுதாரணம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் “மலிவான விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்” எனப் பல நெட்டிசன்கள் மணமகள் தரப்பைச் சாடி வருகின்றனர். எது எப்படியோ, இந்த வினோத திருமண சடங்கு தற்போது உலகளவில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
