3 வருஷம் உருகி உருகி காதலித்துவிட்டு… காதலி திருமணம் செய்ய சொன்னதால்.. நண்பர்களோடு சேர்ந்து காதலன் செய்த் கொடூரம்… வயலில் எலும்புக்கூடாக கிடந்த சடலம்..!!

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 16, 2025 அன்று, 22 வயதான சங்கீதா உசேந்தி என்பவரை அவரது காதலன் தினேஷ் துக்கா மற்றும் அவனது நண்பர்கள் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர், கொலையை மறைக்க உடலையும் மொபைல் போனையும் புதருக்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

சங்கீதா காணாமல் போனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்திய பகஞ்சூர் போலீஸார், காதலன் தினேஷ் மற்றும் அவனது நண்பர்களைக் கைது செய்துள்ளனர். மூன்று வருடக் காதலுக்குப் பிறகு, திருமணத்திற்கு வற்புறுத்தியதற்காக ஒரு இளம்பெண் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

வயசான காலத்துல இது தேவையா..? “சட்டை பட்டனை போடுங்க..” ஆபாசமாக பேசிய நபருக்கு விமானப்படை அதிகாரி கொடுத்த மாஸ் பதிலடி..!!

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டிய சமூக ஊடக வெளியில், சக பெண்ணையே ஆடை மற்றும் கண்ணியம் என்ற பெயரில்…

2 minutes ago

KG படிக்க ரூ.2.25 லட்சமா..? “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” தானே சொல்லி கொடுப்பாங்க… எல்.கே.ஜி கட்டணத்தைப் பார்த்து தலைசுற்றிப்போன நெட்டிசன்கள்..!!

இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக…

7 minutes ago

நெகிழ்ச்சி..! 3 மாதக் குழந்தையைத் தன் குட்டி என நினைத்து தூக்கிச்சென்ற குரங்கு… ஒன்றரை மணி நேரம் அரவணைத்த அதிசயம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…

12 minutes ago

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

40 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

2 மணத்தியாலங்கள் ago