“திருமணத்திற்கு சம்மதித்த பெற்றோர்…! காதலியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்ற காதலன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் தார்வாட்டில் ஜகியா முல்லா என்ற பாரா மெடிக்கல் மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதர்க்காட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வேலை தேடிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், மாணவியின் உறவினரும் காதலனுமான சாபிர் முல்லா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து ஜகியாவின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

   

கொலை செய்த பிறகு எதுவுமே தெரியாதது போல காவல்துறையினருடன் சேர்ந்து தேடுவது போலவும், பெற்றோருடன் ஆறுதல் சொல்வது போலவும் சாபிர் நாடகமாடியது அனைவரையும் அதிரவைத்துள்ளது. செல்போன் சிக்னல் மற்றும் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அவர் சிக்கிக்கொண்டார்.

   

இந்தக் கொடூரச் செயலில் சாபிரின் நண்பர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், காதலனே மாணவியைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.