NDA கூட்டணி எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது… பாஜகவை கடுமையாக சாடிய ஸ்டாலின்…!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

“தமிழ்நாட்டில் பாஜக – என்.டி.ஏ கூட்டணி இணைந்த டபுள் எஞ்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்குப் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும், அந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு இன்று வரலாறு போற்றும் வகையிலான வளர்ச்சியை எட்டியுள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாஜக அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகக் குற்றம் சாட்டிய முதலமைச்சர், அத்தகைய துரோகங்களை மறைக்க முயன்றாலும் தமிழக மக்கள் அதனை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார். பிரதமரின் கருத்திற்குப் பதிலடியாக வந்துள்ள முதலமைச்சரின் இந்தச் சாடல், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.