#image_title
மிக்ஜாம் புயல் சென்னையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்று 8 நாட்கள் ஆன பின்னரும் புற நகர் பகுதிகளில் வெள்ளம் இன்னமும் வடியவில்லை.
வெள்ளம் வடிந்தாலும் நகரின் பல பகுதிகளும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பல நாட்கள் ஆகும். வெள்ள நீர் புகுந்த வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டது. தொலைக்காட்சி, ப்ரிட்ஜ், வாசிங் மெசின், இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகி விட்டன. உடமைகளை இழந்து பல லட்சம் பேர் தவிக்கின்றனர்.
இந்நிலையில் அரசு, எதிர்க்கட்சிகள், திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவரின் மகன் வைபவ் ‘ப்ளே ஸ்டேஷன் வாங்க வைத்திருந்த 1830 பணத்தை வைத்து சூர்யா உணவு தேவைப்படுபவர்களுக்கு வழங்க வேண்டும்’ என இணையத்தில் வீடியோ வெளியிட்டு அன்பு கட்டளை இட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் ‘சூர்யா பெரியப்பா.. இந்த காசெல்லாம் நான் வந்து ப்ளே ஸ்டோர் வாங்குவதற்காக வச்சிருந்தேன். இப்ப வந்து சென்னையில் வெள்ளம் வந்ததுனால நிறைய மக்கள் சாப்பாடு இல்லாம இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இந்த காசை வைச்சு நீங்க சாப்பாடு வாங்கி கொடுத்திருங்க. நான் வந்து காசு அப்பாகிட்ட தரேன். அப்பா உங்க கிட்ட தருவாங்க. சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு என்கிட்ட சொல்லுங்க பெரியப்பா’ என்று அன்பு கட்டளை இட்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…