செத்துட்டா.? ஐயோ டாக்டர் எப்படியாவது காப்பாத்துங்க… புறா இறந்ததால் கதறி அழுத சிறுவன்… மனதை உருக வைக்கும் வீடியோ..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் புறாவை ஒரு பெஞ்சில் வைக்கச் சொல்ல, சிறுவன் அதை அப்படியே வைத்துவிட்டு புறாவை பார்த்து, “இது இறந்துவிட்டதா?” என கேட்கிறான். அதற்கு மருத்துவ ஊழியர் “ இறந்துவிட்டது” என்று சொல்ல  இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளார்.

புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத அந்த சிறுவன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ இணையாவசிகளிடையே நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. உண்மையான பாசம் என்பது உயிரினங்கள்,  மனிதர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் உருவாகும் என்பதை இந்த வீடியோ மேலும் வலியுறுத்துகிறது