கும்பகோணம்: தமிழர்களுக்கு விரோதமாக செயல்படும் பிரதமர் மோடி வருகையை கண்டித்து நாளை கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்த விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரதமர் மோடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்ற முழுக்கங்களோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் பரபரப்பு நிலவியது.
