“வியூஸில் பராசக்தி.. வசூலில் ஜனநாயகன்…” விஜய் vs சிவகார்த்திகேயன் மோதலில் முந்தியது யார்…? அதிர வைக்கும் முன்பதிவு நிலவரம்…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், அவற்றின் வசூல் நிலவரம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையதளப் பார்வைகளைப்  பொறுத்தவரை, விஜய்யின் சாதனையை முறியடித்து சிவகார்த்திகேயனின் டிரைலர் 40 மில்லியன் பார்வைகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இருப்பினும், திரையரங்க முன்பதிவில் விஜய் தனது அசைக்க முடியாத பலத்தை நிரூபித்து வருகிறார்.

உலகளாவிய முன்பதிவு வசூலில் விஜய்யின் திரைப்படம் சுமார் 35 கோடி ரூபாயைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் படம் இன்னும் 5 கோடி ரூபாயைக் கூடத் தொடவில்லை என்று கூறப்படுகிறது. விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதாலும், அதன் அரசியல் கதைகளாலும் ரசிகர்களிடையே நிலவும் அதீத ஆர்வம் இந்த இமாலய வசூலுக்குக் காரணமாக உள்ளது. அதே சமயம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் இது மிகப்பெரிய தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.