ஆதவ் அர்ஜுனா போட்ட வெடிகுண்டு… அடுத்த நிமிடமே தூக்கப்பட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளி… பரபரக்கும் அரசியல் களம்…!!!

By Muthu Mani on பங்குனி 25, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் திமுகவும், டெல்லி லாபியும் இணைந்து காங்கிரஸைச் சிதைத்துவிட்டதாகவும், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்குக் கள அரசியல் தெரியவில்லை என்றும் சாடினார். பிடிக்காத பெண்ணைக் கட்டாயத் திருமணம் செய்து அடைத்து வைத்திருப்பதைப் போன்றதுதான் திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று ஒப்பிட்ட அவர், தமிழகத்தில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கட்சியைத் திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுக மற்றும் டெல்லியை ஒரே நேரத்தில் எதிர்க்கும் துணிச்சல் விஜய்க்கு மட்டுமே இருப்பதாகப் புகழாரம் சூட்டியதோடு, இன்னும் 2 நாட்களில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையப் போவதாகவும் அதிரடியாகத் தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், அதன் உடனடி விளைவாகக் காங்கிரஸ் கட்சியில் நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்ததாகக் கூறப்படும் தமிழக காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் செல்வம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தவெக முன்னெடுத்துள்ள இந்தத் திடீர் அரசியல் நகர்வுகளும், அதையொட்டி நிகழ்ந்துள்ள இந்தச் சஸ்பெண்ட் நடவடிக்கையும் தமிழகக் கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.