காருக்குள் கிடந்த காதல் ஜோடியின் சடலம்… காதலர் தினத்தன்று அரங்கேறிய கொடூரம்… 15 வருட காதலில் நடந்தது என்ன..??

By Soundarya on மாசி 15, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14, 2026) ஒரு காருக்குள்  ஒரு ஜோடி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டார் 107-ல் உள்ள தாத்ரி சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த டாட்டா ஆல்ட்ரோஸ் காரில், டெல்லியைச் சேர்ந்த சுமித் (32) மற்றும் நொய்டாவைச் சேர்ந்த ரேகா (26) ஆகிய இருவரது உடல்கள் துப்பாக்கிக் காயங்களுடன் இருந்தன. கார் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த நிலையில், சுமித்தின் கையில் ஒரு கைத்துப்பாக்கி இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், காதலில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுமித் தனது காதலி ரேகாவைச் சுட்டுவிட்டு, பின்னர் தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகவும், ரேகாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுமித் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சுமித்தின் குடும்பத்தினர் இது சாதி ரீதியான கொலை (Caste-based murder) என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நொய்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.