குளித்தலை சட்டமன்றத் தொகுதி திமுகவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். 1957-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் தனது முதல் தேர்தல் வெற்றியை இங்குதான் பதிவு செய்தார் . நீண்ட காலம் அதிமுகவின் கோட்டையாக விளங்கிய இந்தத் தொகுதியில், 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக மீண்டும் தனது வெற்றியை உறுதி செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், இந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவது திமுகவிற்கு கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளது.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில், திமுகவின் இந்த எழுச்சியைத் தடுக்க பாஜக தலைமை தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. குளித்தலையில் திமுகவை வீழ்த்தினால் அது தங்களுக்குப் பெரும் அரசியல் வெற்றியாக அமையும் என கருதும் பாஜக, இத்தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதன் மூலம் வரும் தேர்தலில் குளித்தலையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
