தமிழக அரசியலில் செம பரபரப்பு..! யாரோடு கூட்டணி..? முக்கிய முடிவை வெளியிடும் காங்கிரஸ்…!!

By Soundarya on தை 17, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து டெல்லியில் இன்று  காங்கிரஸ் மேலிடம் முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பதா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தொகுதிப் பங்கீடு மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் எந்தத் தரப்புடன் இணைந்தால் காங்கிரஸின் பலம் அதிகரிக்கும் என்பது குறித்து மாலை 4 மணியளவில் தேசிய தலைமையுடன் ஆலோசிக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியில் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், புதிய வரவான தவெக குறித்த காங்கிரஸின் இந்த நகர்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.