தமிழகத்தில் அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் தொகுதிகளைக் குறிவைத்து பாஜக களம் இறங்கியுள்ளதாகவும், பிரதான எதிர்க்கட்சி இடத்தைப் பிடிப்பதே அமித் ஷாவின் தற்போதைய இலக்கு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் வெற்றியைத் தடுப்பதை விட, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதிலேயே பாஜக தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் பின்பற்றிய அதே பாணியைத் தமிழகத்திலும் செயல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அண்மையில் தமிழகம் வந்த அமித்ஷா திருச்சியில் அதிமுக மூத்த நிர்வாகி வேலுமணியைச் சந்தித்து , தொகுதிப் பட்டியலை வழங்கிவிட்டு, “தாங்கள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த இடங்களைக் கைப்பற்றுவதன் மூலம், தமிழகத்தின் அடுத்த முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்க பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
