சத்தம் இல்லாமல் நடந்து முடிந்த பிகில் பட நடிகையின் திருமணம்…. காதலனை கரம் பிடித்த க்யூட் தருணம்… அழகிய புகைப்படங்கள் இதோ..

By Begam

Updated on:

ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக பிகில் பட நடிகை காயத்ரி தனது காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் 2019 இல் வெளியாகிய வெற்றி படங்களில் ஒன்று பிகில். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தளபதி விஜய் இரண்டு வேடங்களில்  நடித்திருப்பார். அதில் மைக்கில் கேரக்டர் ஒன்று. மைக்கில் கேரக்டர் கால்பந்தாட்ட பயிற்சியாளராக காட்டப்படும்.

   

 

இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். தளபதி விஜய்யிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா ரவிச்சந்திரன், அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா ஜான், இந்திரஜா சங்கர், வர்ஷா பொல்லம்மா மற்றும் காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகை காயத்ரி ரெட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தற்பொழுது அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அந்த அழகான தருணங்களை புகைப்படம் மூலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது , ‘என் கணவரை அதிகாரப்  பூர்வமாக அறிமுகப்படுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.  இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….