பழிவாங்கிய சீனா..! அருணாச்சலப் பிரதேசம் பற்றி பேசியதால்… “15 மணி நேரம் சிறை, உணவு மறுப்பு” … இந்திய யூடியூபரின் கண்ணீர் வாக்குமூலம்..!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

“ஆன் ரோடு இந்தியன்” என்ற பெயரில் புகழ்பெற்ற இந்திய யூடியூபர் ஆனந்த் மிட்டல், சீனப் பயணத்தின் போது தான் எதிர்கொண்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். கடந்த நவம்பர் 16-ம் தேதி சீனா சென்றபோது, சீன அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சுமார் 15 மணி நேரம் காவலில் வைத்துள்ளனர். இந்த நேரத்தில் அவருக்கு உணவோ அல்லது உரிய வசதிகளோ வழங்கப்படவில்லை என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே சீன அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

   
View this post on Instagram

 

A post shared by On Road Indian (@onroadindian)

குடிவரவு (Immigration) சோதனையின் போது திடீரென அவரது பாஸ்போர்ட்டில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிய அதிகாரிகள், அவரைத் தனிக் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஐபேட் தவிர அவரிடமிருந்த செல்போன் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்து சோதனையிட்டுள்ளனர். அவர் ஒரு யூடியூபர் என்பதைத் தெரிந்து வைத்திருந்த அதிகாரிகள், அவரது பழைய வீடியோக்கள் மற்றும் இந்தியா-சீனா எல்லை தொடர்பான அவரது நிலைப்பாடு குறித்துத் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.

   
சீனாவில் இருந்தபோது சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசக்கூடாது என்பதையும், பத்திரமாக தாயகம் திரும்புவதே முக்கியம் என்பதையும் உணர்ந்தேன் என்றும்,  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூன்று ஆண்டுகள் தங்கிப் படித்ததன் காரணமாக, அந்தப் பகுதி மக்கள் மீது தமக்கு மிகுந்த பாசம் உண்டு என்றும், அதன் காரணமாகவே அந்தப் பகுதியை ஆதரித்துப் பேசியதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.