ஐயோ… மனைவியின் தலையை ஃபிரிட்ஜில் வைத்த கொடூரம்… சடலத்தைக் கண்டு அதிர்ந்த போலிஸ்… நடுங்க வைக்கும் பயங்கரம்….!

By Swetha on புரட்டாதி 8, 2026

Spread the love

கௌஹாத்தியின் பசிஷ்டாபூர் பகுதியில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்ததாக ராமனுஜ் கோஸ்வாமி என்ற நபர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணமான இத்தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கோஸ்வாமி, ஆத்திரத்தில் ‘டாவ்’ என்ற கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ரியா தாலுக்தார் கோஸ்வாமி குடும்பத்தினரின் அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் ஹாடிகான் காவல்துறையினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டில் ரியா தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலை ஒரு கருப்பு பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவரது விரல்களும் துண்டிக்கப்பட்டிருந்தன.

   

https://twitter.com/HateDetectors/status/2097219801701876150/video/1

   

கைது செய்யப்பட்ட கோஸ்வாமி, தான் செய்த செயலுக்கு எந்தவித மனவருத்தமும் இல்லை எனக் கூறியதுடன், எதிர்காலத்தில் சிறையிலிருந்து விடுதலையானால் மனைவியின் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படும் நபரையும் கொல்வேன் எனத் தெரிவித்துள்ளார். குற்றப்பிரிவு CID மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளி போதைப்பொருளின் தாக்கத்தில் இச்செயலைச் செய்தாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.