திருத்தணி அருகே வீட்டிலிருந்து உணவு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மணிகண்டன் என்பவர் மீது தனியார் பேருந்து மோதி கொடூர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
