உத்தரப் பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள மகோபா மாவட்டத்தில், கஞ்சா வாங்க ரூ.60 தராததால் பெற்ற தாயையே மகன் கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, மோகன் என்ற அந்த நபர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், வழக்கமாக கஞ்சா உபயோகித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று கஞ்சா வாங்குவதற்காகத் தன் தாயிடம் ரூ.60 கேட்டுள்ளார். ஆனால், தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மோகன், அவரை கோடரியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் சம்பவ இடத்திலேயே தாய் உயிரிழந்த நிலையில், அந்த நபர் தப்பிச்செல்லாமல் உடலின் அருகிலேயே சுமார் இரண்டு மணி நேரம் அமைதியாக அமர்ந்திருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
